சென்னையில் என்னைப்போல புனிதர்கள் இருப்பதன் அடையாளமாக இன்று இரவு நல்ல மழை தாராளமாக பெய்கிறது.
ரஜினி ரசிக கண்மணிகள் அவர்கள் தலை படம் வருவதால் தான் சென்னையில் மழை என்று கொஞ்சம் போல உடான்ஸ் விட்டுக்கொள்ளலாம்,யார் கேட்கப் போகிறார்கள்.
மழையைப் பார்த்து ஒரு மாமாங்கம் ஆகப் போகிறது என்பதால் ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தேன். ஒரு தம் பற்ற வைத்துக்கொண்டு (நமுத்து விட்டது பாதி தம்)
மழை பெய்தால் சினிமாவில் கதாப்பாத்திரங்கள் எல்லாம் ஓடிப்போய் நனைகிறார்கள் (பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கவோ?) நாம் மட்டும் ஒதுங்கி நிற்கிறோமே என்று தோன்றியது ஆனால் நாளைக்கு நமககு தான் மூக்கடைப்பு ,காய்ச்சல் ,இன்ன பிற எல்லாம் வந்து நான்கு விரல் காட்டும் அனாசின் தேவைப்படும்!
மழை பெய்த்ததும் மண் வாசனை வருமே எங்கே காணோம் என்று கொஞ்ச நேரம் மண்டையை பிறாய்ந்துக்கொண்டேன் இந்த கான்கிரிட் காட்டில் அதற்கெல்லாம் கொடுப்பினை இல்லை என்பதை தாமதமாக விளங்கிக் கொண்டேன்.
சரி அந்த மண்வாசனை வரக்காரணம் ஒரு பேக்டீரியா என்று படித்த நியாபகம் அது என்ன என்று யோசித்து கடைசியில் ஒரு பழைய புத்தகத்தை தேடி கண்டுக்கொண்டாயிற்று, “ஆக்டினோமைசெட்ஸ்” என்ற நுண்ணுயிர் , வறண்ட காலத்தில் ஸ்போர்களை உருவாக்கி மண்ணில் விட்டு செல்லும் மழை நீர் பட்டதும் அவை உடைந்து நுண்ணுயிர் வெளிப்படுகிறது,எனவே மண்வாசனை வருகிறது என ஆழமாக சுவாசித்தால் நுண்ணுயிர் தான் நம் மூக்கில் போகும் ஜாக்கிரதை(பயம் வேண்டாம் நோய் எதுவும் வராது அது ஒரு தாவரங்களுக்கான நுண்ணுயிர்)