ஜூலை, 2007 க்கான தொகுப்பு

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!

ஜூலை 29, 2007

மேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.

spotted deer
பொதுப்பெயர் – அறிவியல்பெயர்

1)ஆசிய யானை – எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)

2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)

3)நீர் யானை – ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)

4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)

5)கருப்பு கரடி – உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)

6)பாண்டா கரடி – ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)

7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)

8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)

9) பேக்டீரியன் ஒட்டம் – கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)

10) வரிக்குதிரை – ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)

11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)

12) இந்திய நரி – வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)

13) சிறுத்தை – பாந்ரா பார்டுஸ் (panthera pardus)

14)புலி – பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)

15)சிங்கம் – பாந்ரா லியோ (panthera lio)

16)வீட்டு எலி – முஸ் முஸ்குலஸ் (mus musculas)

17)மான்(Sambar) செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)

18) புள்ளி மான் – செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)

ஆத்தா ஆடு ,வளர்த்தா , கோழி வளர்த்தா .. பேரு வைச்சாங்களா…

ஜூலை 26, 2007

அன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்றின் விஞ்ஞான பெயர்களை நினைவு கூர்வதில்லை, ஆத்தா வளர்த்த ஆடு ,கோழிக்கு என்ன அறிவியல் பேருனு தெரிஞ்சுக்கலாமா!

பொதுப்பெயர் – அறிவியல்ப்பெயர்

1)கோழி – கால்லஸ் டொமெஸ்டிகஸ் (Gallus domesticus)

2)வான்கோழி – மெல்லெக்ரிஸ் காலோபோவா (Melleagris gallopavo)

3)புறா – கொலம்பியா லிவியா ( Colombia livia)

4)வாத்து – ஆனஸ் பிளாடிரிங்கா(Anas platyrhyncha)

5)ஆடு – ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries)

6) செம்மறி ஆடு – கேப்ரா ஹிர்கஸ் (Capra hircus)

7) முயல் – ஒரிக்டோலாகஸ் க்யுனிகுலஸ ( Oryctolagus cuniculus)

8)பன்றி – சூஸ் க்ரோபா (Sus scrofa)

9) எறுமை - பபலஸ் பபாலிஸ் (Bubalus bubalis)

10)மாடு – போஸ் இன்டிகஸ் ( Bos indicus)

11) எருது - பைசன் பைசன் ((Bison bison)

12)குதிரை – ஈக்கஸ் கேபலஸ் (Equus caballus)

13) கழுதை - ஈக்கஸ் அசினஸ் (Equus asinus)

14) நாய் – கேனிஸ் பேமிலியாரிஸ் ( Canis familiaris)

15) பூனை – பெலிஸ் கேடஸ் (Felis catus)

கடைசியா சிங்கிளா வர சிங்கத்துக்கு பேரு தெரிஞ்சிக்காம போக கூடாதுல,

சிங்கம் – பேந்த்ரா லியோ (Panthera lio)

கணினி ஓவியம் – 3- கடல்புறா!

ஜூலை 25, 2007

என்னைப்போல பெரிய பெயிண்டர்(பொங்கல் சமயத்தில் வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கேன்ல) எல்லாம் களத்தில் இருக்கேனு தெரிஞ்சபிறகும் பலர் போட்டியில் குதித்து களத்தை சூடு ஏத்திக்கொண்டு இருப்பதால் இன்னும் கொஞ்சம் சிறப்பான ஒரு படம் காட்டலாம் என்று அடுத்த படைப்பை இறக்கியாச்சு. பார்த்து ரசியுங்கள்! புது புது வண்ணங்கள் படைப்பதால் நானும் பிரம்மனே!

கடல் புறானா வானத்தில் இருக்கும்னு நினைக்காதிங்க தண்ணில மிதக்குதே பாய்மரப்படகு அதான் என்னோட கடல்புறா!

மரத்தின் வயதினை அறிவது எப்படி!

ஜூலை 24, 2007
(a car travel thru a giant redwood)

மனிதர்களின் வயதினை அவர்களது பிறப்பு சான்றிதழ் வைத்து அறியலாம், அது இல்லாதவர்களிடம் ஆண்டு, நாள் எல்லாம் அவர்கள் நினைவில் இருந்து சொல்வதை வைத்து தான் அறியவேண்டும், பலர் கப்சா விடக்கூடும் குறிப்பாக பெண்கள் வயதை குறைத்தே சொல்வார்கள்!

இப்படி எந்த சான்றும் இல்லாத , வாய் திறந்தும் பேசாத மரத்தின் வயதினை எப்படி கண்டுபிடிப்பது.உலகில் பல நூற்றாண்டுகண்ட மரங்கள் இன்றும் உயிரோடு உள்ளன.

சில மாண்புமிகு மனிதர்கள் நட்ட மரம் என்றால் பக்கத்தில் ஒரு பலகையும் நட்டுவைப்பார்கள். காட்டு மரங்களுக்கு அப்படி எதுவும் இருக்காதே!

மரங்களின் வயதைப்பற்றி ஆராயும் துறைக்கு டென்ரோகுரோனோலாஜி(Dendrochronology)

முதல் வழி நம்பகமானதும் செலவு பிடிக்க கூடியதுமான கார்பன் டேட்டிங். C-14(isotope) என்ற கார்பன் அணு சோதனை மூலம் வயதினை ஆண்டு,வினாடி சுத்தமாக சொல்ல முடியும்.

மற்ற முறை எளிய செலவு இல்லாத ஒன்று மரங்களில் காணப்படும் வருடாந்திர வளையங்கள்.எல்லா மரங்களிலும் குறுக்கு வாட்டில் அறுத்து பார்த்தால் பல வளையங்கள் இருக்கும் ஒரு வளையம் உருவாக ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டு ஆகும். இப்படி எத்தனை வளையங்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டு வயதான மரம் என சொல்லலாம்!

வயதைக்கண்டுப்பிடிக்க எல்லா மரங்களையும் வெட்ட முடியாது எனவே மரத்தின் மையப்பகுதி வரை துளையிட்டு ஒரு சிறிய துண்டாக ஒரு மாதிரி எடுப்பார்கள், இதற்கு இன்கிரிமென்டல் போரர்(incremental borer) என்ற ஒரு குழல் போன்ற கருவி பயன்படுகிறது.

குழல் பகுதியை நன்கு முடுக்கி மரத்தின் உள்செலுத்துவார்கள் இதன் மூலம் மரத்தின் மையம் வரைஉள்ளப்பகுதி குழலின் உள் சேகரமாகிவிடும். அதனை எடுத்து வளையங்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பார்கள்.

இப்படி மரத்தின் வருடாந்திர வளையங்கள் மூலம் வயதை நிர்ணயிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.

1)துளையிடுவது மரத்திற்கு எந்தவகையிலும் சேதம் உண்டாக்கதவாறு இருக்க வேண்டும்.

2)விதையிலிருந்து மரம் உருவாகும் முதல் வருடத்தில் சிறு செடியாக இருக்கும் எனவே அப்போது எந்த வளையமும் உருவாகாது எனவே n+1 என வயது வரும்.

3)சில மரங்கள் ஏற்கனவே இருக்கும் மரத்தின் கிளைகளை நட்டு உருவான மரமாக இருக்கும் எனவே அதிலும் சில வலையங்கள் முன்னரே உருவாகி இருக்கலாம். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில தோராயமாக வயதை அறியும் முறைகளும் இருக்கிறது.

மரத்தின் சுற்றளவை நமது மார்பளவு உயரத்தில் அளந்து கொண்டு அதில் இருந்து மரத்தின் விட்டம் ,ஆரம் கண்டு பிடிக்க வேண்டும்.

பின்னர் அதே வகை வேறொரு மரத்தின் ஆண்டு வளைத்தின் மாதிரியில் இருந்து ஒரு வளையத்தின் தடிமனை அளந்து கொள்ளவேண்டும்.ஒரே வகை சேர்ந்த மரங்கள் பெரும்பாலும் ஒத்த தடிமன் உள்ள வலையங்களையே உருவாக்கும். இப்போது நாம் கண்டுப்பிடிக்க வேண்டிய மரத்தின் ஆரத்தை வளையத்தின் தடிமனால் வகுத்தால் வருவது மரத்தின் வயது ஆகும்.

உதாரணம்:

மரத்தின் சுற்றளவு c = 2×22/7xR,
இதிலிருந்து R=50 இன்ச் என வைத்துக்கொள்வோம்
வளையத்தின் தடிமன் =0.5 இன்ச்
ஃ வயது= R/0.5= 50/0.5= 100 ஆண்டுகள்.

கணினி ஓவியம் – 2

ஜூலை 24, 2007

கணினிப்போட்டிக்கு இன்னொரு படம் , கோயில் குளம்!

கணினி ஓவியம்!

ஜூலை 23, 2007

சிந்தாநதி கணினிஓவியப்போட்டி நடத்துவதால் நமது கிறுக்களையும் அனுப்ப வாய்ப்பு கிடைத்து விட்டது, கண்ணை பதம்பார்க்கும் படம் இதோ!

The water falls!

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?

ஜூலை 23, 2007

மேட்டுர் அணைக்கு 10 tmc தண்ணீர் கர்னாடக திறந்து விட்டது என்றெல்லாம் செய்திதாள்களில் படித்து இருப்பீர்கள் , அவர்கள் எப்படி 10 tmc சரியாக திறந்து விட்டார்கள் , அல்லது நாம் தான் 10 tmc சரியாக வந்ததா என்று அளந்து சரி பார்ப்பது எப்படி , ஆற்றில் வரும் தண்ணீரை எப்படி அளப்பார்கள் என்றெல்லாம் சந்தேகம் வந்து இருக்கும் உங்கள் அனைவருக்கும்.

ஆற்றில் வரும் நீரை அளப்பது எப்படி?, tmc என்றால் என்ன ?, நீரை கன அளவுகளில் தான் சொல்வார்கள் லிட்டர் என்பதெல்லம் சிறிய அளவுக்கு அதிகம் எனில் கன அடிகளில் , நீர் வெளியேறும் வேகத்தை கியூசெக்(cusec= cubic feet per sec)), எத்தனை கன அடி நீர் ஒரு வினாடியில் வெளி ஏறுகிறது எனக்கணக்கிடுவார்கள்.tmc(thousand million qubic feet) என்றால் ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.ஒரு கன அடியில் 28.3 லிட்டர் இருக்கும்.

ஒரு நதி அல்லது கால்வாயில் ஓடும் நீரின் அளவை கணக்கிட சில முறைகள் உள்ளது.

சிறிய அளவில் அளப்பதற்கு நீர் கரன்ட் மீட்டர் பயண்படும் சாதாரணமாக வீட்டில் குடிநீர் இணைப்பில் இது போன்ற கருவி பொருத்தப்பட்டிருக்கும் ,

பெரிய அளவில் அளக்க ,

1)வெயர் முறை(weir method)
2)டாப்ளர் முறை பயன்படும்!
வேறு சில முறைகளும் உள்ளது, பெரிதும் பயன்படுவது இவையே!

வெயர் முறை என்பது வேறொன்றும் இல்லை, தண்ணீர் வெளியேறும் வாயிலின் கனப்பரிமானங்களை கணக்கிடுவதே.

உதாரணமாக கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் அளவில் ஒரு திறப்பு மட்டும் இருக்கும் , எனவே ஒரு வினாடிய்ல் அந்த திறப்பின் மூலம் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

கொஞ்சம் பெரிய கால்வாய்களில் இது போன்ற திறப்பை பெரிதாக வைத்து
உயரத்தை அளவிட்டு விடுவார்கள்

(weir construction)

இத்தனை அடி உயரத்தில் நீர் போனால்

இவ்வளவு தண்ணீர் பாய்ந்துள்ளது எனக்கணக்கிடுவார்கள்.

காவிரி போன்ற பெரிய நதிகளில் இப்படி அணைக்கட்டாமல் , ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்து எடுத்து அங்கே நதியின் அகலம் , ஆழம் எல்லாம் கணக்கிட்டு உயரத்தை காட்ட ஒரு பெரிய கம்பத்தில் அளவிட்டு நட்டு விடுவார்கள் எத்தனை அடி உயரம் தண்ணீர் எவ்வளவு நேரம் அக்குறிப்பிட்ட இடத்தை கடந்து சென்றது எனக்கணக்கிட்டு மொத்த நீர் பாய்ந்த அளவை கண்டுபிடிப்பார்கள்.

இதிலும் நவீன முறை டாப்ளர் ராடார் பயன்படுத்துவது.

உயரமான இடத்தில் (அ) அணைக்கட்டின் மீதே டாப்ளர் ரேடார் எனப்படும் ஒலியை அனுப்பி மீண்டும் திரும்ப வாங்கும் கருவியை பொருத்தி விடுவார்கள். இந்த ரேடார் நீரோட்டத்தின் வேகத்தை கணக்கிட மட்டுமே, மற்றபடி நதியின் அகலம் ,ஆழம் கடக்கும் வேகம் இதனை கொண்டு நீரின் கன அளவை கண்டு பிடித்துகொள்வார்கள்.

நதியின் அடிமட்டத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் அதன் விளைவாக நீரின் மேற்பறப்பில் வேகம் ஒரு இடத்தில் அதிகமாகவும் ஒரு இடத்தில் குறைவாகவும் காட்டும் , இதனை ரேடாரில் பதிவு செய்வது கடினமாக இருக்கும். எனவே நதியின் குறுக்கே குறைந்த மட்ட அணை ஒன்றைக்கட்டுவார்கள் இது எப்படி இருக்கும் எனில் நீர் மட்டத்தில் ஒரு சுவர் போல இருக்கும் அதன் மீது நீர் வழிந்தோடும் எனவே அக்குறிப்பிட்ட இடத்தில் நீரின் மேற்பறப்பு சமமாகவும் , ஒரே வேகத்திலும் இருக்கும். எதிரொலிக்க வசதியாக நீரில் சில எதிரொலிக்கும்
பொருட்களையும் மிதக்க விட்டு அனுப்புவார்கள் , டாப்ளர் ரேடார் அனுப்பும் ஒலியை அவை கன கச்சிதமாக எதிரொலித்து அனுப்பும் எனவே துல்லியமாக நீரோட்டதின் வேகத்தை கணக்கிடலாம், அதைக்கொண்டு மொத்தமாக பாயும் நீரின் கன அளவை சொல்வார்கள்.

( low head dam)

பிள்ளிகுண்டு என்ற இடத்தில் கர்நாடக மேட்டூர்க்கு அனுப்பும் நீரை இப்படி அளந்து அனுப்பும் , அதனை நாம் மீண்டும் மேட்டுரில் அளந்து பார்ப்போம்.இரண்டு அளவிற்கும் 20 சதவித ஏற்ற தாழ்வு(அவர்கள் 10 tmc அனுப்பினால் இங்கே 8 tmc தான் காட்டுகிறதாம்) இருப்பதாக ஒரு தனி தாவா வேறு இருக்கிறது.

உபரி தகவல் மேட்டூர் அணை(length- 1700 m, height 120 ft) என்று சொன்னாலும் அதற்கு பெயர் ஸ்டான்லி நீர் தேக்கம் ஆகும் . மொத்த கொள்ளளவு 93.4tmc.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்!

ஜூலை 21, 2007


விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை.

வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஏடுபட்டவர்களை பார்ப்போம்!

1)பறக்கும் எந்திரம் பற்றி முதளில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட ,
2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார்.
3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார்.
4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவி மூலாம் ஒரு விமானத்தை 50 மீட்டர் தூரம் பறக்கவைத்தார்.
5)ஓடோ லிலிந்தால் (german)என்பவர் கிளைடர் மூலாம் வானில் பறந்து காட்டினார்.

6)இதன் பின்னரே ரைட் சகோதரர்கள்(america) தங்கள் முயற்சியில் இறங்கினார்கள் , கிட்டி ஹாக் , வடக்கு கரோலினா பகுதியில் முதல் பறக்கும் எந்திரதிரத்தை பறக்க விட்டார்கள். அது பை பிளேன் எனப்படும் , 500 மீட்டர்கள் வரைக்கும் பறந்தது , பின்னர் அரை மணி நேரம் வானில் பறந்து காட்டினார்கள், இதன் பின்னறே விமானங்களின் வளர்ச்சி முழு வீச்சை எட்டியது.

விமானம் பரக்ககாரணம் , ஒரு விமானத்தின் மீது செயல்படும் விசைகள் என்னவெனப்பார்ப்போம்!1) மேல் தூக்கும் விசை(lift),

இந்த விசை விமானத்தின் இறக்கைகளின் வடிமைப்பினால் பெறப்படுகிறது. இறக்கையானது மேல் புறம் வளைந்து காணப்படும் அதனால் காற்றில் ஒரு அழுத்த வித்தியாசம் உருவாக்கப்படும். அதே சமயத்தில் இறக்கையின் கீழ்புறம் அழுத்தம் குறையும். எனவே இறக்கைப்பறப்பு மேல் நோக்கி தூக்கப்படும் அதனால் விமானம் மேல் கிளம்ப்பும் , இது விமான எடையை சமன் செய்ய வேண்டும்.

2) அதற்கு எதிறாக கீழ் நோக்கி செயல்படும் எடை(weight)

3) முன்னோக்கி செயல்படும் உந்து சக்தி(thrust)
இது விமானத்தின் மோக்கில் உள்ள புரோபெல்லர்கள் சுழல்வதால் கிடைக்கிறது … ஒரு எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன் எப்படி காற்றை உள் இழுக்கிறதோ அப்படி செயல்படும் அதன் மூலம் விமானம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

4) இதற்கு எதிறாக பின்னோக்கி செயல்படும் இழுவை சக்தி(drag)

காற்றோடு விமானம் உரசுவதால் ஏற்படும் பின்னோக்கிய இழுவை சக்தி இது , இதனை உந்து சக்தி சமன் செய்ய வேண்டும்.

மேல்நோக்கி செயல்படும் விசை விமான இறக்கை மூலம் எப்படி பெறப்படுகிறது என்பதை விளக்கமாக பார்ப்போம்,

இது இரண்டு விதிகளின் படி விளக்கபடுகிறது ,
1) பெர்னோலி விதி,
2) நியூட்டன் இரண்டாவது இயக்கவியல் விதி!

பெர்னோலி விதிப்படி …

1)வேகமாக ஒரு திரவம் செல்லும் போது அழுத்தம் குறையும்,
2)ஒரு நீர்மம் ஒரு குறிப்பிட்ட சூழலில் இரண்டாக பிரிக்கும் போது இரண்டும் சம தூரத்தை சம நேரத்தில் கடக்கும்.

இதற்காக விமானத்தின் இறக்கை மேல்புறம் குவிந்து வளைவுடன் இருக்கும் அதனால் அதன் பரப்பளவு அதிகமாக இருக்கும் மேல்புறம் அதே சமயம் கீழ்புற்ம் சமமாக இருக்கும், குறைந்த பறப்பு!

எனவே இறக்கையின் முன்புறம் மோதும் காற்று இரண்டாக பிரிந்து செல்லும் போது மேல் செல்லும் காற்று அதிக தூரத்தை கடக்கும் , கீழ் செல்லும் காற்று குறைந்த தூரம் கடக்க வேண்டும் , ஆனால் இரண்டும் இறக்கையின் பின் புறம் ஒரே நேராத்தில் சந்திக்க வேண்டும்.

எனவே தானகவே மேல் செல்லும் காற்று வேகம் அதிகரிக்கும், அதனால் குறைந்த அழுத்தம் உண்டாகும் அதனுடன் ஒப்பிடுகையில் கீழ் செல்லும் காற்று அழுத்தம் அதிகம் இருக்கும் எனவே இறக்கையின் மீது மேல் நோக்கி ஒரு விசையை உண்டாக்கும்.

இந்த விசையை அதிகரிக்க காற்று மோதும் கோணத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக விசைய பெற செய்யலாம்.

நியூட்டனின் விதிப்படி ,விசை = முடுக்கம்xநிறை,
கீழ்புறம் செல்லும் காற்றினை கீழ் நோக்கிய கோணத்தில் திசை திருப்பினால் மேலும் லிப்ட் கிடைக்கும்.

எனவே கீழ் செல்லும் காற்றின் அளவை அதிகரித்தும் , அதனை கீழ் நோக்கிய கோணத்தில் இடப்பெயர்ச்சி செய்ய வைக்க வேண்டும். எவ்வளவு காற்று கீழ் நோக்கி இடப்பெயர்ச்சி செய்றதோ அவ்வளவு எடையை மேல் நோக்கி நகர்த்த முடியும்.

இதனை அதிகரிக்க விமான இறக்கைகளின் பின் விளிம்பில் நகரும் தன்மையுள்ள பட்டிகள் இணைக்கபட்டு இருக்கும்.

விமானத்தின் மீது மோதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் லிப்ட் அதிகம் கிடைக்கும் என்பதால் தான் விமானம் பறப்பதற்கு முன் வேகமாக ஓட்டப்படுகிறது.

மேல் எழும்பி பறக்க ஆரம்ப்பித்ததும் முன் செலுத்தும் விசை ப்ரொபெல்லர்கள் மூலம் பெறப்படுகிறது.

மேல் எழும்ப ,கீழ் இறக்க .. இறைக்கைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டிகளை மேல்/ கீழ் நோக்கி நகர்த்துவன் மூலம் செய்யலாம்!

இடது வலதாக திரும்ப வால்பகுதியில் உள்ள செங்குத்தான அமைப்பு ரட்டர் எனப்படும் அதனுடன் இணைந்த பட்டிகளை இடது வலதாக திருப்புவதன் மூலம் திருப்பலாம்.

பட்டம் பற … பற … எப்படி பறக்கிறது…

ஜூலை 20, 2007

சின்ன வயதில் எல்லோரும் பட்டம் பறக்க விட்டு இருப்பீர்கள், அப்படி பறக்க விட்ட எல்லாரும் ஒருவகையில் வானூர்தி பொறியாளர்கள் தான். பட்டம் பறக்க என்ன தத்துவமோ அதன் அடிப்படையில் தான் விமானங்கள் பறக்கிறது. ரைட் சகோதரர்கள் கூட தங்களது விமான மாதிரி செய்வதற்கு முன் பட்டம் பறக்கவிட்டு தான் பறத்தல் குறித்தான சந்தேகங்களை தீர்த்துக் கொண்டார்கள்!

பட்டம் பற … பற … எப்படி பறக்கிறது…

பட்டம் என்பது சதுரமான ஒரு காகிதம் அதன் மீது ஒரு புறம் இருந்து வேகமான காற்று மோதுகிறது … அப்படி மோதும் காற்று தடைப்பட்டு தொடர முடியாது ஆனால் பட்டம் தவிர்த்த பகுதிகளில் காற்று கடந்து செல்லும் எனவே பட்டத்தின் நேர் பின் புறம் காற்றின் அழுத்தம் குறையும் எனவே முன் பகுதியில் உள்ள கூடுதல் காற்ரழுத்தம் காரணமாக ஏற்படும் விசை பட்டத்தினை பின் நோக்கி தள்ளும்…அதே சமயம் பட்டம் தறைக்கு ஒரு கோணத்திலும் இருப்பதால் அதே கோணத்தில் காற்று செல்லும் அதனை தொடர்ந்து பட்டமும் மேல்னோக்கி தூக்கப்படும்.

இப்படியாக பட்டம் பறக்க ஆரம்ப்பிக்கிறது எளிதாக தெரிந்தாலும் இதன் அடிப்படை தான் விமானம் இயங்க காரணம்.

பெர்னோலி என்பவரின் நீர்மவியல் விதி இதில் செயல்படுகிறது
சுருக்கமாக அதனைப் பார்ப்போம்,

அழுத்தம் + இயக்க ஆற்றல்/ பருமன் = மாறிலி

இது தான் பெர்னோலியின் தத்துவத்தின் சூத்திர வடிவம்

{v^2 \over 2}+gh+{p \over \rho}=\mathrm{constant}

where:

v = fluid velocity along the streamline
g = acceleration due to gravity
h = height of the fluid
p = pressure along the streamline
ρ = density of the fluid
எந்த ஒரு பொருள் அதன் எடைக்கு சமமான காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அதனால் பறக்க முடியும் , மனிதனால் அவன் எடைக்கு இணையான காற்றினை இடப்பெயர்ச்சி செய்ய முடியுமானால் பறவை ஆகலாம்.நீரில் நீந்துவதும் இப்படி தான்! பறவைகள் அத்னால் தான் எடைகுறைவாக , குழல் போன்ற எலும்புகளும், கொண்டு உள்ளது எனவே எளிதாக பறக்க முடிகிறது.

விமானம் பறப்பதை பிறகு பார்ப்போம்!

நினைவிருக்கும் வரை…

ஜூலை 19, 2007

என் நினைவுகளின்

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த காலம் ,

நிகழ் காலம்

எதிர்காலம் என

எல்லா திசைகளிலும்

துழாவி என் இருப்பை

நினைவுருத்துகிறது

என் விருப்பமின்றி!

என்னையே தொலைத்த தருணங்களிலும்

நான் என்ற

என் நினைவைத்தொலைத்ததில்லை!

கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே

என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!

என்றாவது என் நினைவுகள்

மரிக்கலாம்

எனவே என் நினைவுத்தடங்களை

விட்டு செல்கிறேன் இவ்விடம்!